கோவை யை சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார். அவரது இல்லத்திற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
*பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாவட்ட கழக செயலாளர் நா.கார்த்திக், தொ.அ.ரவி
தளபதி முருகேசன்,கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசாமி,வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, பகுதிக்கழக செயலாளர்கள் சேக் அப்துல்லா ,பசுபதி,கார்த்திக்செல்வராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு என்கிற சந்தோஷ் ,பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன் ,ரகுதுரைராஜ், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.