Skip to content

மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திருச்சியில்  திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தி பேசினார்.  அவர் பேசியதாவது:

மணமக்கள் இருவரும் இரு மொழி கொள்கையில் படித்து இன்று நல்ல முறையில் இருப்பவர்கள். இந்த திருமணம் சுய மரியாதை திருமணம். கலப்பு திருமணம். மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 6000 கோடி நிதி கேட்டபோது வழங்கவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்கிற பெயரை கூட பட்ஜெட்டில் கூறவில்லை. மும்மொழி கொள்கை எனக் கூறி இந்தியை திணிக்கிறார்கள். இந்தியை படித்தால் தான் நிதி என கூறி நமக்கான நிதியை வழங்கவில்லை. இந்த பிரச்சனை திமுக பிரச்சனை கிடையாது, இந்தியா கூட்டணி பிரச்சனை கிடையாது. இது மாணவர்களின் பிரச்சனை. நம் உரிமையை கேட்டால் அதை தர மறுக்கிறார்கள். நிதியை தர வில்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். மொழி உரிமை, கல்வி உரிமை எவ்வளவு முக்கியம் என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

error: Content is protected !!