தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும், தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தஇளைஞர் அணி வழங்கப்பட்டது போல் நிர்வாக ரீதியாக துை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வந்தது. குறிப்பாக பல அமைச்சர்களும் இது குறித்து நேரடியாக கூறி வந்தனர். நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற பவளவிழாவில் முன்னாள் எம்பியும் ஸ்டாலின் விருது பெற்றவருமான எஸ் எஸ் பழனிமாணிக்கம் முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு தம்பி உதயநிதியை துணை முதல்வராக்குங்கள் என கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.. இதனையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து பெற்றார. முக்கிய அமைச்சர்களும் திமுகவின் முக்கிய நி்ர்வாகிகளும் உதயநிதிக்கு நேரிடையாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..