Skip to content
Home » பலரின் அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கியவர் சசிகலா, உதயகுமார் கடும் தாக்கு

பலரின் அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கியவர் சசிகலா, உதயகுமார் கடும் தாக்கு

சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர்  உதயகுமார் இன்று மதுரையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:தனக்கு தானே  பிரசாரம் செய்து சசிகலா தன்னை முன்னிலை படுத்துகிறார்.  அவர்  சார்ந்த சமூகத்தின், குடும்ப வாழ்வாதாரத்திற்கு தீர்வு காண  ஏதாவது முயற்சி எடுத்து இருக்கிறாரா, மனசாட்சி  தொட்டு சொல்லட்டும்  இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். தனது சமூக பின்புலத்தை காட்டி தங்களை வளர்த்து கொண்டார். இந்த சமூகத்தின்  வளர்ச்சிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் பயணணத்தில்  நம்பிக்கைக்கு  உரியவர்களான எஸ்டிஎஸ், திருநாவுக்கரசு, கருப்பசாமி பாண்டியன்,. சத்தியமூர்த்தி,  நயினார் நாகேந்தி்ரன்,  நத்தம் வி்ஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் . அழகு திருநாவுக்கரசு ஆகியோரின் அரசியல் கேள்விக்குறியாக யார் காரணம். எஸ்டிஎஸ் மரணத்தின் போது  யாரும் போய் பார்க்க கூடாது என்ற நிலையை உருவர்கியவர் யார்.?  அழகு திருநாவுக்கரசு  மரணத்தின்போது கூட யாரும் போய் பார்க்க முடியவில்லை.

இந்த தலைவர்கள் அரசியல் கேள்விக்குறியாக்கியவர்,   தென்காசியில் சுற்றுலா தொடங்கியுள்ளவர்(சசிகலா) தான் காரணம். இதை எங்கு வேண்டுமானாலும் நான் சொல்லுவேன்.  கறந்த பால்மடிபுகாது,  கருவாடு மீன் ஆகாது என்று காளிமுத்து சொல்வார். அரசியலில் ஓய்வு பெற்றவர் இப்போது அரசியலுக்கு வருகிறேன் என்கிறார்.

சாதி சமய இனத்திற்கு அப்பாற்பட்டது  அதிமுகு. ஆடி மாதத்தில்  தொடங்கிய சுற்றுப்பயணம், சுற்றலாவாகத்தான் இருக்கும். அவருக்கு இருக்கும் வசதிக்கு இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்திருக்கலாம். அவர்  எதுவும் செய்யவில்லை. ஆனாலும் சிலர் இன்னும் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். இந்த சமூகத்தில் பலர் தினந்தோறும் செத்து செத்து பிழைக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்திருந்தால் சொல்லுங்கள். கடுகளவு  கூட நன்மை செய்யவில்லை. அவர் இந்த பின்புலத்தை பயன்படுத்தி கணக்கில்லாமல் சேர்த்து உள்ளார். அவரை நம்ப யாரும் தயாராக இல்லை.  சசிகலாவால் பயனடைந்தவர்கள் யார்?

அதிமுக தொண்டர்கள், இந்த சமூக மக்கள்  கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.  அதிமுக பொதுக்குழு தான் எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது. அதிமுகவில் பொதுக்குழு  தான் சக்தி வாய்ந்தது. இதனை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.  அதிமுக ஆட்சி ஏற்பட வேண்டும் என்றால்  ஜானகி அம்மா போல  சசிகலா விலகி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *