அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்காக சென்றுள்ளார். வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர், சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.