அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். புதிய வேட்பாளராக துணை ஜனாதி்பதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரீசை பைடன் முன் நிறுத்தினார். அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. விரைலவில் அவர் புதிய வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். இவர் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவார்.
இதனை தொடர்ந்து ஹாரிஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செனட் உறுப்பினர்கள் மற்றும் கவர்னர்கள் உள்ளிட்டோரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்டி, இந்த தேர்தலில் டிரம்பை தோற்கடிப்போம் என்றார். அவரை வீழ்த்தி காட்டுவேன் என்றும் ஹாரிஸ் சூளுரைத்து உள்ளார். ஹாரிசுக்கு கட்சியின் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தொிவிக்கப்பட்டு வருகிறது .
கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். சமீப வாரங்களாக, பைடனுக்கு பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என கவின் முன்பேதன்னை முன்னிறுத்தி கூறினார். இந்த சூழலில், அவர் வெளியிட்ட செய்தியில், நம்முடைய நாட்டை ஆரோக்கியம் நிறைந்த வழியிலான பயணத்திற்கு வழிகாட்ட அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிசை விட சிறந்த வேறொருவர் யாரும் இல்லை. டிரம்ப்பின் இருண்ட தொலைநோக்கு பார்வையை வீழ்த்தி, அமெரிக்க ஜனநாயகம் எதிர்காலத்தில் வளருவதற்கான சரியான, அச்சமற்ற, உறுதி வாய்ந்த நபராக ஹாரிஸ் இருப்பார் என அவர் தெரிவித்து உள்ளார்.