Skip to content
Home » பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

  • by Senthil

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ,  மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர விரைவு ரயில் (ரயில் எண் 22535) மற்றும்
ராமேஸ்வரம் – அயோத்தி கேன்ட் – ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் (ரயில் எண் 22613/14) ஆகிய இரண்டு ரயில்களும்,
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் .
இந்தக் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த  கடிதத்தில்  கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மேலாளரை அலைபேசியிலும் தொடர்பு கொண்டு திருச்சி எம்.பி துரை.வைகோ கோரிக்கை வைத்தார். அவரும் விரைந்து பரிசீலித்து ஆவன செய்வதாக பதிலளித்தார்.

0 thoughts on “பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்”

  1. அரு. வீரமணி

    Rock fort Express should extend up to Karaikudi Junction . Trichy MP Thiru . Durai Vaiko Must initiate This proposal. This will very helpful to Pudukkottai &Karaikudi Passengers.

    Comment awaiting moderation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!