திருச்சி, முசிறியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (19). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவதன்று முசிறியில் இருந்து மேட்டுப்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் ரத்த வௌ்ளத்தில் துடி துடித்துக்கொண்டிருந்தார். அவ்வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் பாஸ்கரை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
