திருச்சி பொன்மலை அம்பேத்கார் திருமண மண்டப சாலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் ரெயில்வே பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வந்துள்ளார். அப்பொழுது அவரிடம் கத்தியுடன் 3 பேர் வழிமறித்து மிரட்டியுள்ளனர். பிறகு 3 பேரும் சேர்ந்து அவரது இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர்.பிறகு இது குறித்து ரெயில்வே பள்ளி ஆசிரியர் பொன்மலை போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரயில்வே ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மூன்று மர்ம ஆசாமிகளை தொலைபேசி தேடி வருகின்றனர்.
நேற்று அமாவாசையை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் அமாவாசை நாளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு 3 வாலிபர்கள் ரெயில்வே பள்ளி ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.