அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சேலத்தான் காடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர். இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில் சந்திரா பாளையத்தை சேர்ந்த சகாதேவன் என்பவரது டூவீலரில் போடக்கூடிய பெட்ரோல் இரவு நிறுத்தி வைக்கப்பட்டு காலை பார்க்கும்போது காணாமல் போய்விடுகிறது. இதனை கண்டுபிடிக்க சகாதேவன் விழித்திருந்து பார்த்தபோது தனுஷ் என்பவர் டூவீலரில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரும் தனுஷை மரத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். இது குறித்த வீடியோவை தனூஷின் சித்தப்பா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தனுசை கொலை முயற்ச்சியுடன் தாக்கிய வழக்கில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.