திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன் தலைமை வகித்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார அலுவலர் நவீனா ரெட்டி முன்னிலை வகித்தார். அங்கண்வாடி பணியாளர்கள் இருசக்கர வாகன மூலம் பதாகைகளை ஏந்திய வன்னம் பேரணியானது
வெங்கடாசலபுரத்தில் இருந்து ஆத்தூர் ரோடு வழியாக உப்பிலியபுரம் அண்ணா சிலை வரை சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலான உலக் தாய்ப்பால் வாரத்தை கொண்டாடும் வகையில் உப்பியபுரம் வட்டாரத்துக்கு உட்பட்ட எரகுடி, டாப் செங்காட்டுப்பட்டி, உப்பிலியபுரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று தாய்ப்பாலின் அவசியத்தை குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்து கூறி வருகின்றனர் மேலும் குழுக்களாகவும் செயல்பட்டு தாய்ப்பால் அவசியத்தை விலக்கி வருகின்றனர் பேரணியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.