தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (59). இவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கில் புறப்பட்டார். தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு மூலிகைப் பண்ணை எதிரில் வந்த போது சாலையில் பசு மாடு ஒன்று குறுக்கே புகுந்தது. பசு மாடு மீது மோதாமல் இருக்க தமிழ்ச்செல்வன் பைக்கை திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இது தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
