ஈரோடு மாவட்டம், பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரின் மனைவி யாழினி . இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் MS முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் யாழினி கல்லூரி முடிந்து மாலை 6 மணி அளவில் அவரது டூவீலரில் விடுதியில் இருந்து கிளம்பி பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நேச்சுரல் பார்லர் மற்றும் அக்ஷயா சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டு வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள தெற்கு அபிராமபுரம் சென்று கொண்டிருந்த போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் யாழினியை வழிமறித்து மிரட்டியுள்ளனர். அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலிச்செயின் மற்றும் கையில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றை மிரட்டி பறித்து தப்பிச் சென்றுவிட்டனர். உடனே யாழினி கல்லூரியில் MS படிக்கும் தீரன் நகரில் வசிக்கும் அருண் பிரசாந்த் நண்பர் ராம்சன் என்பவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர். புகாரின் பெயரில் பெரம்பலூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
