திருச்சி ஈ.பி.ரோடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவரது உறவினர் சிவரஞ்சனி (27) ஆன்லைன் வங்கித் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வு சிறுகனூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்காக தேர்வை எழுத ரமேஷ் டூவீலரில் சிவரஞ்சனியை தேர்வு மையத்திற்கு நேற்று சென்றள்ளனர். அப்போது சிறுகனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது புதுச்சேரியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவரஞ்சனி படுகாயமடைந்தார். இச்சம்பவம் தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சிவரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புதுச்சேரி தோப்புரோடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரனை (30) பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.