Skip to content

கோவை-கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..

சாலைப் பாதுகாப்பு, பசுமைப் பாதுகாப்பு மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை பைக்கர்ஸ் கம்யூனிட்டி சார்பில் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் நடைபெற்றது.

கோவையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு விழிப்புணர்வு என்ற இந்த பயணத்தை, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வாழ்த்துரை வழங்கினார். இந்த விழிப்புணர்வுப் பயணம், சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப் பிடிப்பதன் முக்கியத்துவம், சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் போதை பொருட்களின் தீய விளைவுகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெறுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் கோவை மற்றும் கன்னியாகுமரி இடையே பயணித்து, பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், பொதுமக்களை சந்தித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!