தஞ்சை, நீலகிரி தெற்கு தோட்டம் சாரதா நகரை சேர்ந்தவர் உக்கிரபாண்டியன் (58). இவர் மின்சார வாரியத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்கள் முன்பு இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை வழியாக செல்லும் போது அரசு மருத்துவக்கல்லூரி அருகே ஆட்டோ ஓன்று பின்புறமாக வந்து உக்கிரபாண்டியன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி உக்கிரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.