அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் பிரசாத் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் டூ வீலர் வாகனத்தை திருடிய வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் கோகுலகிருஷ்ணன் சந்திரன் ஆகிய மூன்று பேரை போலிசார் கைது செய்து டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.