நாகப்பட்டினம் நகர பகுதியில் உள்ள வெங்காய கடைத்தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் அசர் தொழுகைக்கு நாகப்பட்டினம் கரையான் பிள்ளையார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரது தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை அதிர்ச்சி அடைந்தார்
மேலும் தர்காவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தில் கள்ளசாவி கொண்டு திறந்து ஓட்டிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது இந்த காட்சிகளை வைத்து சிக்கந்தர் நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது