அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். கூலி தொழிலாளியான இவர் சொந்த வேலையின் காரணமாக ஆண்டிமடம் சென்று விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆண்டிமடம் அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், அரவிந்த்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்தில் படுகாயமடைந்த அரவிந்தராஜ், ஆண்டிமடம் தனியார்
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஜாஸ்மின் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.