திருச்சி, முசிறி வட்டம் மங்களம் மல்லிகை நகரை சேர்ந்தவர் சங்கரன் (58). இவரது மனைவி பொன்னம்மாள்(55). இவர்கள் 2 பேரும் டூவீலரில் வெள்ளாளப்பட்டி பைத்தம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பொன்னம்மாளின் சேலை டூவீலரில் சிக்கியுள்ளது. இதில் பொன்னம்மாள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொன்னம்மாள் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.