திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வேடி மகன் கோகுல் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிலம்பரசன் இவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இருவருக்கும் இடையே திருவிழா ஏற்பட்ட தகராறில் கைகலப்பாக மாறி சண்டையானது குறித்து முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு 1 மணி அளவில் மீண்டும் தகராறு ஏற்பட காவலர் சிலம்பரசன் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து
கோகுலை தாக்கியுள்ளனர் இதன் காரணமாக கோகுலின் நண்பர் ஸ்ரீதர் தட்டிக் கேட்கும் போது அவருக்கும் சரா மாறி அடி விழுந்துள்ளது
அதனை தடுக்க வந்த ஸ்ரீதரின் தாயாரான சிவகுமாரிக்கும் அடி விழுந்ததன் காரணமாக மூன்று பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன் விரோத காரணமாக ஒரு காவலரே அப்பகுதியில் உள்ள வாலிபர் மற்றும் அவருடைய தாயாரை தாக்கி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.