ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஈரோடு தேர்தல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியது.. இதனைத்தொடர்ந்து எடப்பாடி தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. வேட்பாளர் தென்னரசு நாளை வேட்புமனு தாக்கல் செய்யவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
