Skip to content

”பராசக்தி’’ படத்தின் தலைப்பிற்கு இரு படக்குழுவினர் மோதல்..

  • by Authour

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் அவரது 25வது படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியானது.  இந்த படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் எனவும் தெலுங்கு, ஹிந்தி உட்பட மற்ற மொழிகளுக்கு பராசக்தி எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இசையமைத்து தயாரிக்கிறார். அருவி பட இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை எழுதி இயக்குகிறார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் தயாராகும் இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர், புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா, இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா என்ற வாசகங்களுடன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் விஜய் ஆண்டனி.

இதேவேளையில் கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதற்கு சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது.  இந்நிலையில் விஜய் ஆண்டனி தமிழல்லாத மற்ற மொழிகளுக்கு தனது படத்தின் தலைப்பை பராசக்தி என வைத்திருப்பது தற்போது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரண்டு படத்திற்கும் ஒரே பெயரை வைத்திருப்பதை கிண்டல் செய்து வரும் நிலையில், இதற்கு முன் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்து வந்த நிலையில் 22/07.2024 தேதி பராசக்தி என்ற பெயரை தெலுங்கில் பயன்படுத்துவதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ( The South Indian Film Chamber of Commerce) பதிவு செய்த சான்றிதழ் தேதியுடன் தற்போது அவரது எக்ஸலத்தில் வெளியிட்டுள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்திற்கு நினைத்தது போலவே பராசக்தி என்ற பெயருடன் அந்த போஸ்டர் மற்றும் டைட்டில் டீஸர் ஆனது வெளியானது. இந்த நிலையில் தான் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் கடிதம் ஒன்றை வெளியிட்டது. அதில், பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் வந்து 73 வருடங்கள் ஆகிறது, அன்றைய சமூக அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்று டான் பிக்சர்ஸுக்கு கொடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பராசக்தி என்ற தலைப்பை பிரகாசமாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் எதிர்ப்பின் உணர்வை முன்னெடுத்துச் செல்லும் என்று சொல்லப் போகிறோம் ஏவிஎம்குடும்பம், தயாரிப்பாளர்கள் டான் பிக்சர்ஸ் மற்றும் குழுவினரின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என ஒரு கடிதத்தை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வெளியிட்டுள்ளது. இப்படி புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தின் தலைப்பிற்காக தன்னுடைய 25வது படத்திற்காக விஜய் ஆண்டனியும், சிவகார்த்திகேயனின் 25 வது பட தயாரிப்பு நிறுவனமாக டான் பிக்சர்ஸ் மாறி மாறி தங்களுடைய ஆவணங்களை பகிர்ந்து வருவது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

error: Content is protected !!