Skip to content

டிவிட்டரின் புதிய லோகோ “X”… எலான் மஸ்க் அதிரடி…

  • by Authour

எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஒ-வாக பொறுப்பேற்ற அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பயனாளர்கள் தங்கள் டுவிட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை கொண்டு வந்தார்.வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்ததாக எலான் மஸ்க் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், அடுத்த அதிரடியாக டுவிட்டரின் நீல நிற புறா லோகோவை மாற்ற இருப்பதாக நேற்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே புதிய லோகோ வெளியாகியுள்ளது. டுவிட்டரை ரீ பிராண்ட் செய்யும் வகையில் எலான் மஸ்க் அதன் லோகோவை ‘X’ என மாற்றுவதாக அறிவித்து இந்த லோகோவை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் டுவிட்டரின் தனித்துவமான லோகோவான நீல புறாவிற்கு விடை கொடுக்கப்பட உள்ளது. டிவிட்டரின் சிஇஒ லிண்டா யாசினோவும் லோகோ மாற்றத்தை உறுதிப்படுத்தினார். ஆடியோ, வீடியோ, மெசேஜிங், பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!