Skip to content

26தேர்தல்: திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி- பொதுக்குழுவில் விஜய் பேச்சு

தவெக பொதுக்குழுவில்  கட்சித்தலைவா் நடிகர் விஜய் பேசியதாவது: மாநாட்டில்  தொடங்கி இன்று பொதுக்குழு வரை தடைகள்.  எப்படி எல்லாம் தடைகள்.  அத்தனை தடைகளையும் தாண்டி  சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான்  இருக்கிறது. அது தொடர்ந்து நடக்கும்.  எல்லோரும் அடி அடின்னு அடிக்கிறார்கள். அதுபோல நாமும் அடிக்கனுமான்னு  மனதில்யோசனை இருக்கு.

ஒரே குடும்பம்  சுரண்டி வாழ்வது அரசியலா, ? மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே,   மாணபுமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே

பேருல மட்டும் வீராப்பு  இருந்தா பத்தாது அவர்களே,   மத்தியில் பாசிச ஆட்சி என்கிறீர்கள். நீங்கள் மட்டும் என்ன ஆட்சி செய்கிறீர்கள்.   என் கட்சி தொண்டர்களை சந்திக்க தடை போட  நீங்கள் யார்?, சட்டத்தை மதிக்கணும்முன்னு  அமைதியா இருக்கேன்.   தடையை மீறி போகணும்முன்னு  நினைச்சா போயே தீருவேன். நேற்று கட்சி தொடங்கினவன் எல்லாம் ஆட்சிக்கு வரனுமுன்னு நினைக்கிறாங்கன்னு சொல்றீங்க. அது நடக்கவே நடக்காது என்று  சொல்கிறீாகள். தமிழக வெற்றிக்கழகத்தை  தடுக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை தடுக்கலாம்.  காற்றை தடுக்க முடியாது. சக்தி மிக்க சூறாவளியாக,  சக்திமிக்க புயலாக மாறும்.

நான் மாநாட்டில் ஒன்றை சொன்னேன்.  இது சகோதரத்துவ மண். சமூகநீதிக்கான மண். இதை பாதுகாக்கணும்.  பல பகுதிகளில் இருந்து வரும் செய்தியை கேள்வி படும்போது சட்டம் ஒழுங்கு இருக்கான்னு தெரியல.  மக்களை சந்தியுங்க. பேசுங்க. ஆழமான  நம்பிக்கையை விதையுங்க. தமிழக  வெற்றிகழக கொடி  எல்லா வீட்டிலயும் பறக்கணும்.

மன்னாராட்சி முதல்வர் அவர்களே உங்க ஆட்சியபற்றிமட்டும் கேட்டால் ஏன் கோபம் வருகிறது.  படிக்கிற புள்ளைங்க,  பச்ச புள்ளங்களுக்கு நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியல. இதுல வேறு உங்கள அப்பான்னு சொல்றாங்ன்னு சொல்றீங்க.

அரசு ஊழியர்கள் போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து  ஊழியர் போராட்டம், மின்கட்டண உயர்வு எதிா்பு போராட்டம், இது எல்லாம்  வெறும் சாம்பிள் தான். இந்த போராட்டங்களக்கு தவெக கூட நிற்கும்.

நீங்கதான் இப்படிஎன்றால் உங்க சீக்ரெட் ஓனர்.  அவர் அப்படி. ?மோடி அவர்களே  உங்க பேர சொல்ல எங்களுக்கு  பயமா,  சென்டர் ஆளுகிறவர்ன்னு சொல்றோம். அப்புறம் ஏன்  பெயர் சொல்லல  என்கிறீர்கள். ஓட்டுக்கு காங்கிரசுடன் கூட்டணி,  ஊழல் செய்ய மோடியுடன் கூட்டணி.

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி  வாங்குகிறீர்கள்.  ஆனால் கல்விக்கு நிதி கொடுப்பதில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றபோதே உங்க பிளான் தெரிஞ்சு போச்சு.  ஏன். தமிழர்கள் என்றால் உங்களுக்கு அலர்ஜி. ?தமிழ்நாட்டை  கொஞ்சம் கேர்புல்லா  டீல் பண்ணுங்க சார். இது பல பேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட்.

நம்ம ஆட்சி, உங்க ஆட்சி, உண்மையான மக்களாட்சி அறுதி பெரும்பான்மையான ஆட்சி. அதிகாரப்பகிர்வு ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம்  உறுதிப்படுத்துவோம். கல்வி, சுகாதாராம்   எல்லாருக்கும் ஈசியா  கிடைப்பது தான் நம்முடைய டார்க்கெட். தொழிலாளர்களுக்கு நாம எப்போதும் துணையாக இருப்போம். நாம் உழைக்கிறவர்கள் பக்கம் தான்.

விவசாயத்துக்கு எதிரா எந்த நடவடிக்கையும் ஏற்கமாட்டோம். மண்ணையும் விவசாயத்தையும் பாதுகாக்க  எல்லாம் செய்வோம். 26ல் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து நல்ல அரசு அமைப்பதில் உறுதியாக இருப்பதால்,  காற்று, வெயில்,  எல்லாம் யாராலும் தடுக்க முடியாது. இதை ஆண்டவன் உருவாக்கினான். காற்று, சூறாவளி யாரால் தடுக்க முடியும்.

ஞாலம் கருதினும் கை கூடும். காலம் கருதி இடத்தாற் செயின் என்றார் வள்ளுவர்

இதுவரை தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான  தேர்தலை 26y;  தமிழ்நாடு சந்திக்கும்.  26 தேர்தல் 2 பேருக்கு இடையேதான் போட்டி  .ஒன்னு  திமுக, இன்னொன்னு தவெக.

இவ்வாறு அவர் கூறினார்.

 

error: Content is protected !!