தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை(வெள்ளி) காலை 7.20 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சித்தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசுகிறார்கள்.
பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு, ஊடக மேலாண்மை குடு, உபசரிப்பு குழு ஆகிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன