Skip to content

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை   திருவான்மியூரில் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜய் மற்றம் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில்  17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீாமானங்கள் விவரம் வருமாறு:

சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

வக்புவாரிய  திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க   சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்க வேண்டும்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது.

இருமொழிக்கொள்கையில் தவெக உறுதியுடன் உள்ளது.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.

மாநில அரசுகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கவேண்டும்.

மீனவர் போராட்டத்தை  தவெக ஆதரிக்கிறது. மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்கவேண்டும்  என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றவேண்டும். அவர்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டாம் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  தீர்மானங்களை  ஒவ்வொரு நிர்வாகிகாக மேடையில்  வந்து படிக்க அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

error: Content is protected !!