நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தவெக கட்சியை தொடங்கினார். பின்னர் கொடி அறிமுகம், மாநாடு என நடத்தினார். இந்த நிலையில் விரைவில் கட்சி பொதுக்குழுவை கூட்டி கட்சியின் அண்டு விழாவையும் நடத்த திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தலாம் என முடிவு செய்தனர். ஆனால் அங்கு நடத்த அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய இடம் தேர்வு செய்யும் பணியில் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதம் இறுதியில் அல்லது வரும் மார்ச்சில் இந்த பொதுக்குழு, ஆண்டுவிழா நடைபெறும் என தெரிகிறது.