Skip to content
Home » சிவப்பு,மஞ்சள் வண்ணத்தில் போர் யானை, வாகை மலருடன்தவெக கொடி …. நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்

சிவப்பு,மஞ்சள் வண்ணத்தில் போர் யானை, வாகை மலருடன்தவெக கொடி …. நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெறறிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரிமாதம் தொடங்கினாா்.  வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தான்   முதன் முதலாக  தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த விஜய்  இன்று கட்சியின் கொடி, பாடலை அறிமுகம் செய்தார். இதற்கான  விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள விஜயின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபனா ஆகியோர் காலை 9 மணிக்கே கட்சி அலுவலகத்துக்கு வந்து விட்டனர். அவர்களை பொதுச்செயலாளர்   புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.

கொடி அறிமுக விழாவுக்கு 234 தொகுதியில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.  9.15 மணிக்கு நடிகர் விஜய் கட்சி அலுவலகத்துக்கு காரில் வந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும் ஒரு கார் வந்தது.  நடிகர் விஜய் கட்சி அலுவலகத்திற்குள் வந்தும் அங்கு திரண்டிருந்தவர்கள் எழுந்து ஆரவாரம்

செய்தனர்.  அப்போது முதல்வரிசையில் இருந்த தந்தை சந்திரசேகரை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார்.

முதல் வரிசையில்  பச்சைத் துண்டு அணிந்த விவசாயி ஒருவர்,  கொள்கை பரப்பு செயலாளர் தாகிரா,  ஒருவர் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் விஜயும், புஸ்ஸி ஆனந்தும் அமர்ந்தனர். சரியாக 9.18 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். அப்போது விஜயின் பெற்றோரையும் வரவேற்பதாக கூறினார்.  கேரளா, புதுவை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும்  நிர்வாகிகள் வந்திருப்பதாக வரவேற்பில் கூறினார்.  அதைத்தொடர்ந்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.  விஜய் உறுதி மொழியை படிக்க அனைவரும் எழுந்து நின்று உறுதி மொழி ஏற்றனர்.  வலதுகையை இடது மார்பில் வைத்தபடி உறுதிமொழியை படித்தார்.

இந்திய இறையாண்மை மீது நம்பிக்கை வைத்து சமத்துவம், சகோதரத்துவம், மதசார்பின்மை பேணிக்காப்போம். மக்கள் சேவகனான கடமையாற்றுவேன். சாதி், மதம், போன்ற வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற  கொள்கையை ஏற்று உளமாற உறுதி கூறுகிறேன். அனைவருக்கும் சம வாய்ப்பு, கிடைக்க பாடுபடுவேன்.

இவ்வாறு அஉறுதி மொழியில் கூறப்பட்டு இருந்தது.

சரியாக 9.25 மணிக்கு கொடி அறிமுகம் நடந்தது. விஜய்  கொடியை  அறிமுகம் செய்தார். அந்த கொடியை ஒரு பையில் வைத்திருந்த  ஆனந்த் கொடியை எடுத்து கொடுத்தார். அதை விஜய் அறிமுகம் செய்தார். அந்த கொடி மேலும், கீழும் சிவப்பு  வண்ணமும், நடுவில் மஞ்சள் வண்ணமும் இடம் பெற்றிருந்தது.

மஞ்சள் நிறத்தில்  நடுவில் வாகை மலரும்,  அதன் இரு புறமும்  போர் யானையும் இடம் பெற்றிருந்தது.  பின்னர் கட்சி அலுவலகத்தில்  விஜய்  கொடியேற்றினார். அப்போது தொண்டர்கள்  கோஷமிட்டனர்.  அப்போது கொடிக்கம்பத்தின் கல்வெட்டையும் திறந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *