Skip to content

தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம்  முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

திருப்பத்தூரில்  மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பாரத ஸ்டேட் வங்கி அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மத்திய மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாவட்ட செயலாளர் இரா.விஜய்சரவணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் எம்.எஸ்.வசந்த், சாய்ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டியன், தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு சொத்துக்களில் மத்திய அரசே தலையிடாதே, சிறுபான்மை மக்கள் உரிமைகளை சிதைக்காதே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!