தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (அக்.,27) நடத்துகிறார். கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார் என தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். திரையுலகில், ஏற்கனவே விஜய்க்கு மக்கள் ஆதரவு அதிகம். விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்த போது, மாநாடு அன்று தான் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்தக்கட்ட திட்டம் குறித்து அப்டேட் வரும் என்றார். இதுதான் மாநாட்டிற்கு தொண்டர்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்க காரணம். இந்நிலையில், இன்று (அக்.,27) மதியத்திற்கு மேல் தான் மாநாடு துவங்குகிறது. தற்போதே திடலில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இரவு முதலே குவிந்து இருந்த தொண்டர்கள் அருகே இருந்தே இட்லி கடையில் குவிந்தனர். முண்டியடித்து சென்ற தொண்டர்களால் மாநாட்டு திடலில் கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் சேதமடைந்தன. விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாட்டு திடல் அருகிலுள்ள பிள்ளையார் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.
