நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தவெக கட்சியை தொடங்கினார். ஆகஸ்ட் 22ம் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கொடியில் உள்ள யானை தங்களுக்கு உரிமையைானது என கல கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ள நிலையில் செப்டம்பர் 23ம் தேதி விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை என்ற இடத்தில் இதற்காக 85 ஏக்கர் தனியார் நிலத்தை தேர்வு செய்து பணிகளை தொடங்கி உள்ளனர்.
இந்த இடத்தில் மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், விழுப்பும் கலெக்டர், மற்றும் கூடுதல் எஸ்.பி. ஆகியோரிடம் மனு கொடுத்து உள்ளார். .ஏ.டி. எஸ்.பி. திருமால், டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தூரமே உள்ளதுஎனவே மாநாட்டுக்கு வருகிறவர்கள் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீசார் என்ன செய்வது என திணறி வருகிறார்க
இந்த நிலையில் விழுப்பும் டிஎஸ்பி பார்த்திபன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் 21 கேள்விகள் எழுப்பி உள்ளார்.
மாநாடு நடைபெறும் இடம் மொத்தம் எத்தனை ஏக்கர்?
மாநாட்டில் எத்தனை லட்சம் பேர் பங்கேற்பார்கள்?
வாகனங்கள் நிறுத்த எத்தனை ஏக்கர் ஒதுக்கப்படும்?
எவ்வளவு பேர் அமர நாற்காலிகள் போடப்படும்?
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்படுமா?
குடிநீர், உணவுக்கு என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது
போதுமான கழிப்பறை வசதி செய்யப்படுமா?
மாநாட்டு பந்தலின் பரப்பு, மேடையின் நீள, அகலம் என்ன?
மாநாட்டு திடலுக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள தூரம்?
இதுபோன்ற மொத்தம் 21 கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த கேள்விகளுக்கு விஜய் அளிக்கும் பதிலை பொறுத்து, மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது தெரியவரும். 5 நாளில் பதில் தரும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.