Skip to content
Home » அதிகார பகிர்வுக்கு நாங்கள் தயார்.. தவெக தலைவர் விஜய் பேச்சு..

அதிகார பகிர்வுக்கு நாங்கள் தயார்.. தவெக தலைவர் விஜய் பேச்சு..

  • by Authour

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். முதலாவதாக கட்சியின் கொள்கைகள் என ..  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே நம் கோட்பாடு, மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கையாக இருக்கிறது. மதம், சாதி, பாலினம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே. எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம். மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை. தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தவெக பின்பற்றும். “மத நம்பிக்கை உள்ளவர்கள், அற்றவர்களை சமமாக பார்ப்போம்”. பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பதே தவெகவின் கொள்கை,,  என்பதே தவெகவின் கொள்கைகள் என கூறிய விஜய் தொடர்ந்து … நாங்கள் அரசியலில் குழந்தையாக இருக்கலாம். ஆனால் குழந்தை பயமின்றி பாம்பை கையில் எடுத்துவிளையாடும் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள் என கூறி பேசிய ஆரம்பித்த விஜய் பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள். மகத்தான அரசியல் என்றால், மக்களுக்கான அரசியல் தான். மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் நோக்கமல்ல. ஏமாற்று சக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்றுவது தான் எங்கள் நோக்கம். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகின்றனர். சிறுபான்மையினர், பாசிச ஆட்சி, மோடி மஸ்தான் ஆட்சி என்கின்றனர். அவர்கள் பாசிச ஆட்சி என்றால் நீங்கள் என்ன பாயாச ஆட்சியா? பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்துகின்றனர் – விஜய்.
என்னை கூத்தாடி விஜய், கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள். நம்ம ஊர் வாத்தியார் எம்ஜிஆரையும், ஆந்திரா ஊரு வாத்தியார் என்.டி.ஆரும் கட்சி தொடங்கிய போது அவரையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள். கூத்தாடி என்றால் என்ன கெட்ட வார்த்தையா? கூத்து இந்த மண்ணின் அடையாளம். தவெக தனத்து போட்டி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு . அதே சமயம் எங்கள் கொள்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராகும் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல அதிகார பகிர்வுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *