நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார். பின்னர் மாமல்லபுரத்தில் 2ம் ஆண்டு விழாவை நடத்தினார். சென்னையில் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். அடுத்ததாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்த நிலையில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த மாதம் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது
- by Authour
