நடிகர் விஜயின் தவெக கட்சிக்கு 100 மாவட்ட செயலாளர்கள், மற்றும் வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என பல்வேறு அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் கட்சி அலுவலகமான பனையூருக்கு நாளை காலை வரும்படி அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நாளை கட்சித்தலைவர் விஜய் சந்தித்து உரையாடுகிறார். பின்னர் மாவட்ட செயலாளர்களை முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார்.