தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கண் சிகிச்சை மையங்களை லோட்டஸ் கண் மருத்துவமனை இயக்கி வருகிறது. லோட்டஸ் கண் மருத்துவனை, கருரில் தனது கிளையை, செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் துவக்கியுள்ளது. இதன் திறப்பு விழாவில் விருந்தினராக முன்னாள் சிபிஐ இயக்குனர் டி ஆர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
இந்திய நாட்டில் லாபம் இல்லாமல் வேலை செய்யும் ஒரே நபர் விவசாயி தான். கரூரைச் சுற்றி நிறைய விவசாயிகள் உள்ளார்கள் அவர்களுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை இங்கு அளிக்கப்படும்.
கரூரில் பார்க்கிங் வசதி அதிக இடங்களில் இல்லை இது ஒரு பெரும் குறையாக உள்ளது. மிக விரைவில் பார்க்கிங் வசதியுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனை இங்கு அமைக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் கண்களை பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும் அதற்கு கீரை, கேரட் போன்ற உணவு வகைகளைஅதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் மேலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் ஆம்புலன் சேவை உள்ளது.
போதை பொருட்களின் ஆபத்தை விட டிவி மொபைல் மிகவும் ஆபத்தானது குழந்தைகள் டிவி பார்ப்பதையும் மொபைல் போன் பார்ப்பதையும் பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களின் கண்கள் அதிக அளவில் பாதிக்கப்படும். தமிழகம் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களுக்கு அதிநவீன சிகிச்சையை அளித்து வரும் லோட்டஸ் கண் மருத்துவமனை தற்போது கரூரில் துவக்கப்பட்டுள்ளது.
இது கரூர் மக்களின் கண் சிகிச்சை தேவையை பூர்த்தி செய்யும். இங்கு தரமான சேவை மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். கண் மருத்துவ சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.