தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று (26/05/2023) அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
அதன் பின்னர், அருகில் உள்ள கீதா ஹோட்டல் மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார். ஊர் மக்கள் திரளாக இதில் பங்கேற்றனர்.