தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாாிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர்.
பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக்கை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அத்துடன், 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமத்தை இடைக்காலமாக ரத்து செய்தனர். மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி சின்னத்துரை ஜவுளி கடை வளாகம், மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானிபூரி கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.