பொங்கல் திருநாளையொட்டி, அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் நேற்று திரைக்கு வந்தன. திருச்சியில் வாரிசை விட துணிவு அதிக தியேட்டர்களில், அதிக காட்சிகள் திரையிடப்பட்டதுடன் வசூலிலும் புதிய சாதனை படைத்துள்ளது. முதல் நாளான நேற்று திருச்சியில் துணிவு 16 தியேட்டர்களில் 71 காட்சிகள் திரையிடப்பட்டன. இதன் மூலம் ரூ.63 லட்சத்து 70ஆயிரம் வசூலானது. இதற்கு முன் அஜீத்தின் வலிமை ஒரே நாளில் ரூ.50.5 லட்சம் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இப்போது துணிவு முறியடித்து உள்ளது.
திருச்சியில் நேற்று வாரிசு 14 தியேட்டர்களில் 58 காட்சிகள் திரையிடப்பட்டன. இதன் மூலம் ரூ.35 லட்சத்து 20 ஆயிரம் வசூலாகி உள்ளது. பொங்கல் ஜல்லிக்கட்டில் துணிவு வசூல் சாதனை புரிந்துள்ளது.
இதுபோல தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் துணிவு ரூ.24.59 கோடி வசூலித்தது. வாரிசு ரூ.19.43 கோடி வசூலித்து உள்ளது.