தமிழில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜீத். விஜய் வாரிசு படத்திலும், அஜித் துணிவு படத்திலும் நடித்துள்ளனர். 2 படங்களும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளன. பல வருடங்களுக்கு பிறகு 2 பேரும் நடித்த படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், துணிவு படம் வரும் 11ம் தேதி ரலீசாகும் என்று, அதன் தயாரிப்பாளரான போனி கபூர் இன்று அறிவித்துள்ளார்.
ஜிப்ரான் இசையில், வினோத் இயக்கத்தில் அதிரடி, திரில்லர் திரைப்படமாக இது அமைந்துள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்குசுவாரியர் கதா நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் விஜயின் வாரிசு வரும் 11ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக நடித்துள்ளார்.