நாயகன் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் மணிரத்னம், கமல் இணைந்துள்ள படம் தக் லைப். கமல் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது. அத்துடன் தக் லைப் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதாவது வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.