Skip to content

தஞ்சையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தஞ்சைமாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நுரையீரல் துறை சார்பில் உலக காசநோய் தினத்தையொட்டி உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

இந்த ஊர்வலத்துக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதாரப்பணி கள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், துணை இயக்குனர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் முகமதுகலீல் வரவேற்றார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தை சுற்றி வந்தது.

இந்த ஊர்வலத்தில் நர்சுகள், மருத்துவ மாணவ, மாண விகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் டாக்டர் மாதவி, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஆறுமு கம், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரியாஸ் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காசநோய் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து காசநோய் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

error: Content is protected !!