Skip to content
Home » யூடியூபர் டிடிஎஃப் வாசன் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படுகிறது..

யூடியூபர் டிடிஎஃப் வாசன் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படுகிறது..

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது வீலீங் செய்து சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி வாசன் மோட்டார் சைக்களுடன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சாத்திரம் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரைத்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!