சுனாமி பேரழிவு ஏற்பட்டு, இன்று 19 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட வேளாங்கண்ணி வந்த பக்தர்கள் ஏராளமானோர் சுனாமியில் பலியானார்கள். சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி இன்று காலை நடைபெற்றது. இதுபோல் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த 1000த்திற்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த வேளாங்கண்ணி ஆர்ச் சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப் அமைதிப் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது விவிலியும், பகவத் கீதை, குரான்உள்ளிட்டவைகளில் இருந்து
வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர். சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்து போனாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து இருந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கதறி கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும் மாலைகளை வைத்தும், அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு வகைகளை படையலிட்டும் அஞ்சலி செலுத்தினர்.
இதில் பேராலய அதிபர் இருதயராஜ் பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள்
ஆண்டோ ஜேசுராஜ் டேவிட்தனராஜ் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ,பேரூராட்சி செயல்அலுவலர் பொன்னுசாமி ,உதவி பங்கு தந்தையர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.