தமிழ் நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருள்மிகு சந்திர சேகர பிள்ளையார், அருள்மிகு சுப்ரமணியசுவாமி ( முருகன் கோவில்) அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் திருக்கோவில்களுக்கு தமிழ் நாடு அரசால் நியமனம் பெற்ற அறங்காவலர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அய்யம் பேட்டை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் துளசி அய்யா தலைமை வகித்தார். முன்னதாக பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் முனுசாமி வரவேற்றார். அய்யம் பேட்டை லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் சுப்புராமன், அய்யம் பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜ கோபால சுவாமி திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் பாலாஜி, பிரபு, சதீஷ், சாவடி பஜார் வணிகர் சங்கத் தலைவர் ராமலிங்கம், சௌராஷ்டிரா சபா தலைவர் சௌந்தர்ராஜன், வரலாற்று ஆய்வாளர், தஞ்சாவூர் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கத் தலைவர் செல்வராஜ் வாழ்த்திப் பேசினர். அருள்மிகு சந்திர சேகர பிள்ளையார் திருக் கோவில் அறங்காவலர்கள் ரமேஷ், மதியழகன், முத்துலட்சுமி, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள் மோகனவேலு, அன்புச் செல்வம், சத்தியபிரியா, அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் திருக்கோவில் அறங்காவலர்கள் கிருஷ்ணசாமி, தாமரைச் செல்வி, செல்வம் ஆகியோருக்கு இந்து சமய அறநிலையத் துறை திருவையாறு சரக ஆய்வாளர் குணசுந்தரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜாராமன் உட்பட பலர் பங்கேற்றனர். அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர் ரகுராமன் நன்றி கூறினார். பட விளக்கம்: அய்யம் பேட்டை அருள்மிகு சந்திரசேகர பிள்ளையார், சுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் பொறுப்பேற்றனர்.