அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் புளோரிடாவில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:
அனைவருக்கும் நன்றி. அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சட்டப்பூர்வமாக வரவேண்டும். எனக்காக பிரசாரம் செய்த எலான் மஸ்க்கிற்கு நன்றி. உங்கள் மத்தியில் மிகுந்த அன்பை உணர்கிறேன். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக நாம் உழைப்போம். அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். என் வெற்றிக்கு பாடுபட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எலான் மஸ்க் போன்ற ஜீனியஸ்களை போற்றி பாதுகாக்க வேண்டும். இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி என் மீது வைத்திருக்கும் அன்பை காப்பாற்றுவேன். இந்த வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். துணை அதிபராக பதவி ஏற்கும் ஜேடி வான்ஸ்க்கும் நன்றி. உங்கள் அன்புக்கு காணிக்கையாக உங்கள் உழைப்பை தருவோம். அமெரிக்கர்கள் நல்ல உழைப்பாளிகள். உலகின் மற்ற நாடுகளை விட நம்மிடம் எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. சீனாவிடமோ, மற்ற நாடுகளிடமோ இந்த அளவு எண்ணெய் வளமோ மற்ற வளங்களோ இல்லை. பல்வேறு பின்புலங்கள் கொண்டவர்கள் ஒரு அணியாக சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கி உள்ளனர். ஒளிமயமான எதிர்காலத்தை அமெரிக்க மக்களுக்கு தரப்போகிறோம்.
துப்பாக்கி சூட்டில் இருந்து என்னை கடவுள் தான் காப்பாற்றினார். இந்த நாட்டை காப்பாற்றுவதற்காகவே கடவுள் என்னை காப்பாற்றினார். உலகிலேயே மிக முக்கியமான பொறுப்பு அமெரிக்க அதிபர் பொறுப்பு. 900 பிரசாரங்களை மேற்கொண்டோம். அதன் பலனாக வெற்றி கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். அமெரிக்கா முழுவதும் டிரம்ப் ஆதரவாளர்கள் வெற்றி களிப்பில் உள்ளனர்.