அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 270 எலக்ட்ரோல் வாக்குகள் பெற வேண்டிய நிலையில் டிரம்ப் 250 வாக்குகள் பெற்று விட்டார் எனவே அவர் தான் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது.
அங்கு குழுமி இருக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தங்களது வெற்றி உறுதியாகி விட்டது என சொல்லி வருகின்றனர். திரும்பிய பக்கம் எல்லாம் ‘ட்ரம்ப்… ட்ரம்ப்..’ என அவர்கள் முழக்கம்மிட்டு வருகின்றனர். தேர்தலில் யார் வெற்றியாளர் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அந்த மாநாட்டு மையத்தில் உள்ள பெரிய காட்சி திரைகளை அங்குள்ள கண்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றன. ட்ரம்ப் வெற்றிக் கோட்டை நெருங்கும் பொது நள்ளிரவு நேரம் நெருங்கி இருக்கும். அந்த சூழலிலும் அவர் அங்கு வந்து வெற்றி உரை ஆற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
வாஷிங்டனில் உள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசுவதாக இருந்தது. இருப்பினும் தற்போது அவர் அதை தவிர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.