அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நேற்று நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிம்பும் போட்டியிட்டனர். அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது.
மொத்தம்உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது அவை அனைத்தும் பொய்யாகி, டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இதன்படி 250க்கும் மேற்பட்ட எலெக்ட்ரோல் வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். கலிபோர்னியா, வெர்ஜினியா நியூ மெக்சிகோ, நியூயார்க் போன்ற மாகாணங்களில் கலமா ஹாரிஸ் வெற்றிப் பெற்றுள்ளார். அவர் 214 எலெக்ட்ரோல் வாக்குகளைபபெற்றுள்ளார்.
முன்னதாக வெளியாகி இருந்த கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ்தான் வெற்றிப் பெறுவார் என கூறப்பட்ட நிலையில் அவை அனைத்தும் பொய்யாகி உள்ளன. இன்று மாலையே அடுத்த ஜனாதிபதி யார் என்று தெரிந்து விட்டாலும், புதிய அதிபர் ஜனவரி 20ம் தேதி தான் பதவியேற்பார்.
இதற்கு முன் 2016ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹலாரி கிளிண்டனை தோற்கடித்து ஜனாதிபதி ஆனார். 2020ல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம்(தற்போதைய அதிபர்) தோற்றுபோனார். தற்போதும்(2024) கமலா ஹாரீசை தோற்கடித்து ஜனாதிபதி ஆகப்போகிறார்.
அமெரிக்காவில் ஒருவா் 2 முறை மட்டுமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியும். தற்போது டிரம்ப் 2வது முறையாக வெற்றியின் விளிம்பில் உள்ளார். இன்று மாலைக்குள் இறுதி நிலவரம் அறிவிக்கப்பட்டு விடும். டிரம்ப் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது.