மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் கிராமம் பூம்புகார் சாலையில் மங்கை நல்லூரில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி சென்ற ஈச்சர் லாரி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஈச்சர் லாரி ஓட்டுனர் கடலூர் மாவட்டம் வேப்பத்தூர் கொளவாய் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், அதில் பயணித்த அதே பகுதியை சேர்ந்த முருகன், வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முருகன், வினோத் ஆகியோர் எலும்பு முறிவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.