தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே சூழியக் கோட்டையில் வேளாண்மைத் துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு மற்றும் வயல் தின விழா நடந்தது. இதில் அம்மா பேட்டை வேளாண் உதவி இயக்குனர் மோகன், தர கட்டுப்பாடு இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவன துணை விற்பனை மேலாளர் சுரேஷ், வேளாண்மை அலுவலர் பிரியா, வேளாண் துணை அலுவலர் உட்பட 60 விவசாயிகள் கலந்துக் கொண்டனர். இதில் இப்போ நிறுவன அதிகாரி சுரேஷ் பங்கேற்று பேசும் போது…. அரை லிட்டர் நானோ யூரியா பாட்டில் ஒரு மூட்டை யூரியாவிற்கு சமமானது. வழக்கமாக ஒருமுறை மேல்புறம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா மற்றும் அரை மூட்டை பொட்டாஸ் பயன்படுத்தப்படுகிறது. இதன் செலவு ரூபாய் 1000 ஏக்கருக்கு ஆகிறது.
இதற்குப் பதிலாக அரை லிட்டர் நானோ யூரியா மற்றும் அரை லிட்டர் சகாரிகா இரண்டையும் கலந்து ஆறு அல்லது ஏழு டேங்க் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் மேல் உர செலவு பாதியாக குறைகிறது எனவே மண்வளம் பாதிப்படையாமல் பாதுகாக்கப்படுவதோடு மகசூலும் 300 – 500 கிலோ ஏக்கருக்கு அதிகமாக கிடைக்கிறது. மேலும் வேளாண் உதவி இயக்குனர் திரு மோகன் பேசும் போது யூரியா தட்டுப்பாட்டை போக்குவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள நானோ யூரியாவானது விவசாயிகளுக்கு உர செலவினையும் நம் நாட்டின் உரம் மானிய செலவையும் வெகுவாக குறைக்கிறது.